லாக்டவுனில் சும்மா இருக்காமல் கனி அக்கா பண்ற காரியத்தை பாருங்கள் – ஷாக்கில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை கைப்பற்றிய கனி தற்போது போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் நீங்களுமா அக்கா?? என்றி பதறி வருகின்றனர்.

குக் வித் கோமாளி கனி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் பெரிய பொழுதுபோக்காக இருந்து வந்தது. எப்பொழுது சனி,ஞாயிறு வரும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். முதல் சீசனை விட இரண்டாவது சீசன் தான் பலரையும் ஈர்த்தது.

அஸ்வினுடன் ஷிவாங்கி செய்யும் அலப்பறைகள், பாபா மாஸ்டர் செய்யும் சேட்டைகள், கனியை எப்பொழுதுமே வம்பிழுத்து கொண்டிருப்பதால் ஏற்படும் ரகளைகள், சுனிதா அஸ்வினை இம்ப்ரெஸ் சொல்லும் வகையில் சொல்லும் டயலாக் என அனைத்தும் மக்களை மகிழ்விக்க தான் செய்தது.

இப்படி ஒரு நிகழ்ச்சியை யாரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது. முற்றிலும் மாறுபட்ட கான்செப்ட் என்பதால் தான் எளிதில் ரீச் ஆனது. இந்த சீசனில் டைட்டிலை கைப்பற்றிய கனி தன் அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டார்.

அதாவது தான் வீட்டில் இருந்தே வெளியே செல்லாத பெண். தனக்கு இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவ்வளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் கூறியிருந்தார். தற்போது வீட்டிலேயே இருக்கும் கனி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here