தூத்துக்குடி சிவகளையிலும் பழங்கால பண்டங்கள் கண்டுபிடிப்பு..!

0

சிவகளையில் பழங்கால குறியீடுகளை கொண்ட பண்டங்கள் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கீழடியை விட பழமையான சிவாகளை..!

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதி தாமிர பரணி நாகரிகம் கொண்டது. இது சிந்து சம்வெளி நாகரிகத்தை விட பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இங்கு 2004 ஆம் ஆண்டு கிடைத்த முதுமக்கள் தாழியை, அமெரிக்கா புளோரிடா ஆய்வகத்தின் ஆய்வில் அது 2900 ஆண்டுகளுக்கு முந்தையது என உறுதிசெய்யப்பட்டது. ஆக இது கீழடி அகழ்வாய்வில் கண்டதை விட முதுமையானது நிருபனமானது. இதனை தொடர்ந்து, கடந்த மே 25 ஆம் தேதி சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் மாநில அரசின் தொல்லியல் துறை சார்பாக அகழ்வாய்வு தொடங்கப்பட்டது.

முதுமக்கள் தாழி மற்றும் குறியீடுகள் கொண்ட பானைகள்..!

ஹேக் செய்யப்படும் ட்விட்டர் கணக்குகள் – பிட்காயின் மோசடியின் பின்னணி!!

ஏற்கனவே இந்த பகுதியில் பழங்கால பாறை கிண்ணங்கள், இடைகற்கால கருவிகள், கள்வட்டங்கள், இரும்பு கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்ட வகைகள், எடை கற்கள், செம்பினால் ஆன பொருட்கள் என பல கிடைத்தன. இதனை தொடர்ந்து இயற்ற பெற்ற கோரிக்கையின் பெயரில் இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கியது. தற்போது 20கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் சேதம் அடைந்தும் , முழுமையாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பழங்கால குறியீடுகள் கொண்ட 5 உடைந்த மண்பாண்ட பாகங்கள் கிடைத்துள்ளன.

இந்த ஒடுகளில் பிராமி எனப்படும் பழந்தமிழ் எழுத்துக்களும் முந்தைய எழுத்துகள் ஆன கிராஃபிட்டி (Graffiti) எனப்படும் தமிழ் குறியீடுகள் காணப்படுகின்றன. இந்தியாவில் முதன்முதலில் அகழ்வாய்வு நடந்த இடம் ஆதிச்சல்லூரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here