கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து விநியோகம் நிறுத்தம்

0

நாடு முழுவதும் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினத்தில் கொரோனா குணமாக மூலிகை லேகியம் கொடுப்பதால் மக்கள் கூட்டம் அலை மோதியது. தற்போது கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருந்து விநியோகம் நிறுத்தம்:

ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினத்தில் ஆயுர்வேத மருத்துவர் பேனிகி ஆனந்தய்யா கொரோனாவுக்கான மூலிகை லேகியம் தயாரித்து மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். இந்த லேகியத்தில் தேன், மிளகு, பச்சை கற்பூரம், ஜாதிக்காய், கருஞ்சீரகம், பட்டை உட்பட சில மூலிகைகள் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. அவர் தயார் செய்த மூலிகை லேகியத்தை குடித்ததால் அவர்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து ஆனந்தய்யா கூறுகையில் கொரோனா நோயாளிகளை சரி செய்ய 4 வகையான ஆயுர்வேத மருந்துகளை நான் தயார் செய்கிறேன். P, F, L, K ஆகிய சமிக்ஞைகள் சூட்டியுள்ளேன். P மருந்து நுரையீரலில் உள்ள தொற்றை குணப்படுத்தும். F மருந்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும், L நுரையீரல் செயல்பாட்டை தூண்டிவிடும். K மருந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படுகிறது எனவும் கூறுகிறார். எனவே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதனால் நோய் தோற்று பரவும் விகிதம் அதிகமாகும் என கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here