“அரட்டை அரங்கம் முதல் சம்சாரம் அது மின்சாரம் வரை” – விசுவின் நீங்காத நினைவுகள்.!

0

இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் விசு. 74 வயதான இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்து வந்தது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை(22.3.2020) உயிர் இழந்தார்.

விசுவின் படங்கள்

இவரின் திரைப்படங்களில் ஒரு குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான நிகழ்வுகளை வெளிப்படுத்தி இருப்பார். முதலில் இவர் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பின் இவரின் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் அதிக புகழ் பெற்றது. அவர் சிதம்பர ரகசியம், பெண்மணி அவள் கண்மணி, கெட்டி மேளம், வா மகளே வா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இரட்டை ரோஜா, அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் பட்டிமன்ற பேச்சாளரும் கூட. இவரின் அரட்டை அரங்க நிகழ்ச்சி அதிக புகழ் பெற்றது. விசுவின் மரண செய்தி குறித்து அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெற்றிக்கண் ரீமேக் குறித்து அண்மையில் விசு கருத்து தெரிவித்தது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here