என் இலக்கை அடைந்து விட்டேன்…, ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
என் இலக்கை அடைந்து விட்டேன்..., ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
என் இலக்கை அடைந்து விட்டேன்..., ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறாமல் போன தினேஷ் கார்த்திக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்:

இந்திய அணி நாளை முதல் தவான் தலைமையில், நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு எதிரான தொடர்களிலும், இந்தியாவின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் இடம் பெறவில்லை. இதனால், இந்திய அணியில் இவரது இடம் அவ்வளவு தான் போல என ரசிகர்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளார். அவர், அந்த வீடியோவில் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். இதற்காக கடுமையாக பயிற்சி செய்து, அந்த இலக்கையும் அடைந்தேன் என்று கூறியிருந்தார். மேலும், இந்த உலக கோப்பையை வெல்ல தவறினாலும், பல நினைவுகளை அடங்கியதாக இருந்தது.

தவானை நீக்கி கே எல் ராகுல் கேப்டன் ஆனதுக்கு இது காரணம்…, வெளியான உண்மை தகவல்!!

இதற்காக, சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோவை பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவால், இவரது ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்து விட்டாரா என்ற குழப்பத்தில் உள்ளனர். தினேஷ் கார்த்திக் 2004ம் ஆண்டே இந்திய அணிக்கு அறிமுகமானாலும், விக்கெட் கீப்பராக இந்திய அணியில் தோனி இருந்ததால், வாய்ப்புக்காக காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Dinesh Karthik (@dk00019)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here