அரைத்து ஊற்றிய காரசாரமான மட்டன் கிரேவி.., சண்டே ஸ்பெஷல்.., என்ஜாய் பண்ணுங்க!!

0
அரைத்து ஊற்றிய காரசாரமான மட்டன் கிரேவி.., சண்டே ஸ்பெஷல்.., என்ஜாய் பண்ணுங்க!!
அரைத்து ஊற்றிய காரசாரமான மட்டன் கிரேவி.., சண்டே ஸ்பெஷல்.., என்ஜாய் பண்ணுங்க!!

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றான மட்டனை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று தான் நாம் இன்றைக்கு பார்க்கப்போறோம்.

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம்
  • கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
  • எண்ணெய் – 1 கப்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 5
  • உப்பு – தேவையான அளவு
  • தயிர் – 1 கப்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்
  • நெய் – 50 கிராம்

செய்முறை விளக்கம்:

வித்தியாசமான மட்டன் கிரேவி செய்வதற்கு முதலில் மட்டனை சுத்தம் செய்து குக்கரில் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கொத்தமல்லி, புதினா சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பின் வேகவைத்துள்ள மட்டனை, கடாயில் பட்டர் சேர்த்து நன்கு பொரித்து கொள்ளவும்.

அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்யுடன், பட்டை,கிராம், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அத்துடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து கொள்ளவும். இதோடு ஒரு ஸ்பூன் கரம் மசாலா, மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிரேவியை கொதிக்க விடவும். பிறகு அதில் பொரித்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாயை மூடிவிடவும். பின் ஒரு 10 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பில் இருந்து இறக்கினால் சுவாவையான மட்டன் கிரேவி தயார். இதை இட்டிலி தோசை என அனைத்துக்கும் வைத்து சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here