குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை திட்ட பயனாளிகள் பட்டியல் தயாரானதா? நிதியமைச்சர் முழு விளக்கம்!!!

0
குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை திட்ட பயனாளிகள் பட்டியல் தயாரானதா? நிதியமைச்சர் முழு விளக்கம்!!!
குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை திட்ட பயனாளிகள் பட்டியல் தயாரானதா? நிதியமைச்சர் முழு விளக்கம்!!!

குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை பெறக்கூடிய தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்ததாக வெளிவந்த தகவல் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முழு விளக்கம் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை திட்டம்:

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பாலனோர் எதிர்பார்த்தது குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை திட்டம் தான். அதற்கேற்ப தகுதியான குடும்ப தலைவிகளுக்கு அறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், தகுதியானவர்கள் குறித்த விவரம் விரைவில் அரசாணையில் குறிப்பிடப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், விதவை, ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகை பெறாதவர் என சுமார் 80,000 பெண்கள் தகுதியானவர்களாக கருதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. இதுகுறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “மாநிலம் முழுவதும் ரேஷன் கார்டு உள்ளவர்கள் 2.33 கோடி பேர் உள்ளனர். அனைவருக்கும் ரூ.1,000 என பார்த்தால் சுமார் ரூ.27,960 லட்ச கோடி நிதி ஒதுக்க வேண்டியதாக இருக்கும். இதன்மூலம் அரசு நிதி நெருக்கடியில் சிக்க நேரிடும். எனவே வருவாய் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைகளும் இணைந்து தகுதியானவர்கள் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

பளிங்கு சிலையாக மின்னும் பால்கோவா மேனி.., சும்மா பளபளனு தரிசனம் கொடுத்த தமன்னா!!

இதில் எத்தனை பேருக்கு வழங்க வேண்டும் என்ற அளவுகோலை மூத்த அமைச்சர்களின் மூலம் கலந்து ஆலோசித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார். இந்நிலையில் இவர்களுக்கு தான் கிடைக்கும் என ஒரு யூகமாக சொல்ல முடியாது. இந்த தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தகுதியானவர் குறித்த முழு விளக்கமும் விரைவில் அரசாணை மூலமே தெரிவிக்கப்படும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here