பாக்ஸ் ஆபீஸ் கிங் ரஜினி – தர்பார் வசூல் மழை

0
பாக்ஸ் ஆபீஸ் கிங் ரஜினி - தர்பார் வசூல் மழை

ரஜினி நடிப்பில் நேற்று (ஜனவரி 9) வெளியான படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினி 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் ஆன நேற்று வசூலை அள்ளிக் குவித்துள்ளது.

எங்கெங்கு எவ்வளவு ?

இப்படத்தின் முதல் நாள் வசூலைப் பார்க்கும் பொழுது ரஜினி தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இப்படம் முதல் நாளில் செய்த வசூலின் விபரங்கள்,

சென்னை முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் – 2.27 கோடி ருபாய் வசூல்
ஹைதெராபாத் – 10.69 லட்சம்
ஆஸ்திரேலியா – 78 லட்சம்
அமெரிக்கா – 4 லட்சம் அமெரிக்கா டாலர் (160 தியேட்டர்களில் வெளியானது)

மேலும் சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளிலும் வசூலில் முன்னணியில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here