பென்ஸ் நிறுவனத்தின் அவதார் கார் – CES 2020

0
Mercedes benz vision avtr

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த “அவதார்” படத்தில் வரும் அதீத தொழில்நுட்பங்களைக் கூடிய காரினை மாதிரியாக கொண்டு மிஷன் அவதார் (MISSION AVTR) என்ற பெயரில் கான்செப்ட் காரினை லாஸ் வேகாஸில் நடந்த சிஇஎஸ் 2020 (CES 2020) இல் அறிமுகம் செய்துள்ளது.

என்னென்ன சிறப்பம்சங்கள்

இது ஒரு தானியங்கி கார் ஆகும். இதில் மேலும் பல அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின்பக்கத்தில் அசையக்கூடிய 33 செதில்கள் போன்ற அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இவைகள் வெளியே உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் மேலும் இவை அனைத்து திசைகளிலும் இயங்கக்கூடியவை. காரின் சக்கரங்கள் அசைவின் போது சுருங்கி விரியும் தன்மை கொண்டவை.

இந்த காரானது தானாக இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இதில் காரின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முட்டை போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓவல் வடிவமுள்ள இந்த இயக்கியை புடிக்கும் போது அது அவரின் இதயத்துடிப்பினை அதிரச் செய்யும். இக்காரில் பயணிப்பவர்கள் இதயத்துடிப்பு மற்றும் விபரங்களை அறிந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

காரின் திறன்

இந்த காரின் மின்மோட்டார் ஆனது 470 குதிரை ஆற்றல் திறனை வெளிப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
இக்காரில் 110kwh திறன் கொண்ட கிரபேன் பேஸ்ட் ஆர்கானிக் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.

ஆடம்பரமான வடிவமைப்பு

இந்த காரின் தரை தளமானது கருண் என்ற இந்தோனேஷியாவில் இருந்து வரவழைக்கப்பட மரத்தால் செய்யப்பட்டது. இதன் இருக்கைகளுக்கு ‘தினம்கா’ லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இன்டிரியர் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here