பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்., சைபர் கிரைம் எடுத்து அதிரடி நடவடிக்கை!!

0

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த  பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதையடுத்து இமெயில் மூலம் எடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பதை உறுதி செய்து பொதுமக்களுக்கு போலீசார் தெரிவித்தனர்.

உலக கோப்பை 2024 : இந்திய வீரர் முகமது ஷமி விலகல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

மேலும் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் தீவிரப் பணியில் போலீசார் சைபர் க்ரைம் உதவியை நாடியிருந்தனர்‌. தற்போது அது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது புரோட்டான் நிறுவனம் மூலம் கிடைத்த ஜிபி முகவரிகளை வைத்து கர்நாடகா, மகாராஷ்டிரா,டெல்லி, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரணைக்கு சென்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here