காதலியை மணந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே தன் நீண்ட நாள் காதலியை நேற்று (ஜூலை 16,2021) மணந்துள்ளார். இவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவம் துபே, இவர் 28 வயதாகும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர். IPL இல் ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டராக எதிர் அணியை பந்தாடுவார். இவர் இந்திய அணிக்காக 1 ODI போட்டிகளிலும் மற்றும் 13 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த IPL ஏலத்தில் ரூ.4.40 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிவம் துபே, தன் நீண்ட நாள் காதலியான அஞ்சும் கானை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணத்தை சிவம் துபே தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் “நாங்கள் இருவரும் அளவு கடந்த காதலை பரிமாறி கொண்டுள்ளோம், தற்போது எங்களுக்கு திருமணம் நடந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இவரின் திருமணத்திற்கு அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

   

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here