கொரோனா தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்த 125 நாட்கள் மிக முக்கியமானது – மத்திய அரசு!!!

0

கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் மூன்றாம் அலையை தடுக்க முக கவசம், தனிமனித இடைவெளியை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரசால் ஏற்பட்ட இரண்டாம் அலையின் பரவல் தற்போது பல்வேறு மாநிலங்களில் குறைந்து வந்தாலும், இன்னும் சில இடங்களில் இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது. அதும் ஒவ்வொரு நிபுணர்களும் மூன்றாம் அலை பற்றிய ஒவ்வொரு கணிப்பை கூறி வருகின்றனர். நேற்று ICMR வெளியிட்ட தகவலின் படி ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா இந்தியாவை தாக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

இந்தியாவை பொறுத்தவரை நேற்று மட்டும் 38,949 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 542 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல இக்கொடிய நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,01,83,876 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய டெல்டா பிளஸ் ரக வைரஸ் கண்டுபிக்கப்பட்டதால் மூன்றாம் அலை பற்றிய பயம் மக்கள் மனதில் ஆழமாக எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு அடுத்த 100 முதல் 125 நாட்கள் கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த காலகட்டம் என்றும் மக்கள் அனைவரும் அரசின் அறிவுரைப்படி முக கவசம், தனி மனித இடைவெளியை பின்பற்றி மூன்றாம் அலையின் பாதிப்பை தவிர்க்கவேண்டும் என அறிவுறித்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here