இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடராக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் தொடர்:
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதில் ஐபிஎல், ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்டவையும் அடங்கும். எனினும் ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் போட்டிகளை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜூலை 8ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தொடரில் பங்கேற்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஜூன் 9ம் தேதி இங்கிலாந்து சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு 3 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பயிற்சியை தொடங்குவர் என கூறப்பட்டு உள்ளது.
போட்டி அட்டவணை:
- முதல் டெஸ்ட் – ஜூலை 8 முதல் 12 வரை – ஏஐஸ் பெளல்
- 2வது டெஸ்ட் – ஜூலை 16 முதல் 20 வரை – எமிரேட்ஸ் ஓல்ட் டிரபோர்ட்
- 3வது டெஸ்ட் – ஜூலை 24 முதல் 28 வரை – எமிரேட்ஸ் ஓல்ட் டிரபோர்ட்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |