கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா??? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் !!!

0

கொரோனாவின் இரண்டாம் அலை  தொடக்கத்தில் இருந்து தன் ஆக்ரோஷத்தை விடாமல் வீசி வந்தது. அதற்கு இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பலி ஆகி உள்ளார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தொற்றின் விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அந்த அறிக்கையின்  24 மணி நேரத்தில் பதிவான தொற்று 91 நாட்களுக்கு பிறகு 42 ஆயிரமாக குறைந்து உள்ளது.

கொரோனாவின் முதல் அலை மெல்ல மெல்ல பரவி பின்பு நாட்டையே தன் வசப்படுத்தியது. குறிப்பாக மற்ற நாடுகளை பார்க்கையில் கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக அளவு அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று 9 மணி அளவில் தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையின் படி , கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  42,640 பேர் தோற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக 1,167 பேர் உயிர்  இழந்து உள்ளனர். மேலும் அந்த தொற்றிலிருந்து 81,839 விடுபட்டு உள்ளனர்.

இதோடு சேர்த்து தொற்று பாதித்தவர்களின் மொத்த  எண்ணிக்கை 2,99,77,867. மேலும் மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 3,89,3022 மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,89,26,038 ஆகும். இந்த புதிய பதிவு 91 நாட்களுக்கு பிறகு பிறகு 42 ஆயிரமாக குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here