தன் மூன்று மாத தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி நேகா – கொஞ்சி தீர்த்த ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா முதன்முறையாக தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 3 மாதம் ஆன அந்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நேகா. குழந்தைகளுக்கே உள்ள சுட்டித்தனமான நடிப்பால் அனைவரின் மத்தியிலும் இடம் பிடித்தார். இவரது முதல் சீரியலே சன் டிவியில் வாணி ராணி தான். மிகவும் சிறு பிள்ளையாக இருந்த அவரை அனைவர்க்கும் பிடித்து போனது.

ராதிகாவின் மகளாக அந்த சீரியலில் கலக்கி இருப்பார். எப்பொழுதுமே இவர் நடிப்பில் வெளியாகும் சீரியலில் அண்ணன் அக்கா தம்பிகளுடன் அமைந்து விடுகிறது. கடைசி பெண்ணாக தான் அனைத்து சீரியல்களிலும் நடிப்பார் நேகா. வாணி ராணி சீரியலிலும் இவர் தான் கடைசி பெண்.

இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியலிலும் இவர் தான் கடைசி பெண். இந்த சீரியலிலும் எழில், செழியன் என இரு அண்ணன்கள் உள்ளனர். இவருக்கு இவ்வாரே கதைக்களம் அமைந்து விடுகிறது. முதலில் சித்தி 2 சீரியலில் நடிக்க தான் கமிட்டாகி இருந்தார். அது வெறும் சைடு ரோல் தான்.

அப்பொழுது தான் அவருக்கு பாக்கியலட்சுமி வாய்ப்பு கிடைக்க தற்போது இனியாவாக கலக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு தங்கை பிறந்த நிலையில் தற்போது அழகிய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அச்சு அசலாக நேகாவை உரித்து வைத்திருக்கும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here