கொரோனா தொற்று இதயத்தை பாதிக்கும் – மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!

0
Harsh_Vardhan
Harsh_Vardhan

கொரோனா தொற்று ஒரு சுவாசத்தை மட்டுமல்ல, இதயம், சிறுநீரக அமைப்புகளையும் பாதிக்கிறது என்று வளர்ந்து வரும் ஆய்வுகள் தெரிவிப்பதாக மத்திய சுகாதாத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது உரையில் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸின் ஆயுட்காலம் மற்றும் பொது சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வதற்கான செயல் திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

கொரோனா தொற்று:

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நமது சுவாசத்தை தவிர்த்து வேறு என பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகள் சிறிய அளவில் நடைபெறுகிறது. இதனால் இந்த ஆய்வுகளின் முடிவுகள் நமது மக்கள்தொகையின் சூழலில், துல்லியமாக இருக்கலாம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்படியிருந்தாலும், கொரோனா பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் தீவிரமடையக்கூடும். எனவே, கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராய ஒரு நிபுணர் குழு எங்களிடம் உள்ளது. இந்த பிரச்சினைகளை தீவிரமாக ஆய்வு செய்ய ஐ.சி.எம்.ஆர் போன்ற எங்கள் நிறுவனங்களை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். கொரோனா சிகிச்சையில் ரெமெடிவிர் மற்றும் பிளாஸ்மா சிகிச்சைக்கு மாநில அரசுகள் அதிகளவில் முக்கியத்துவம் அளித்து ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!

வழிபாட்டு தலங்களுக்குள் மாஸ்க்களை அகற்ற வேண்டாம் என்று கூறிய அமைச்சர், கடவுள் மாஸ்க் அணிவதை தடை செய்ய மாட்டார். கோயில்கள் மட்டுமல்ல, நீங்கள் ஏதேனும் நெரிசலான இடத்திற்குச் சென்றால், தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். கோயில்கள் மற்றும் பிற பொது இடங்களை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசு ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் பராமரிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here