இத்தாலியில் ஒரே நாளில் கொரோனவால் கிட்டத்தட்ட 1000 பேர் பலி – அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..!

0

உலகளவில் இதுவரை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது .

27 ஆயிரத்தை தாண்டிய பலி..!

உலகளவில் இதுவரை 5,97,267 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 27,365 பேர் உயிர் இழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 1,33,363 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். உலகில் வல்லரசு நாடுகளையும் விட்டுவைக்காத இந்த கொரோனா வைரஸினால் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 1,04,205 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,701 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இத்தாலியில் 10 ஆயிரத்தை நெருங்குகிறது..!

இத்தாலியில் கொரோனா வைரஸினால் இதுவரை 86,498 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 9,134 ஆக உள்ளது. மேலும் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. அங்கு மொத்தம் 81,394 பேர் பாத்திக்கப்பட்டு உள்ளனர். உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,295 ஆக உள்ளது. ஸ்பெயினில் 65,719 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 5,138 பேர் உயிர் இழந்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here