உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
4 லட்சத்தை தாண்டியது..!
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,566 ஆக உள்ளது. இதுவரை 18,887 பேர் இந்த வைரசால் உயிர் இழந்து உள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிர் இழந்து உள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்புகள் எண்ணிக்கை 6,820 ஆக உள்ளது. சீனாவில் இதுவரை 3281 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு – பிரதமர் மோடி அறிவிப்பு..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/corona-death-3-1024x683.jpg)
தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு முதல் பலி – மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் காலமானார்..!
அமெரிக்காவில் இதுவரை 54,808 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 775 பேர் உயிரிழந்து உள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 42,058 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2991 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஈரானில் 24,811 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இதுவரை 1934 பேர் உயிரிழந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |