கொரோனவால் வாழ்வாதாரத்தை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய சினிமா நட்சத்திரங்கள்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.

ரஜினி, சிவகார்த்திகேயன் மற்றும் பலர்..!

திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார் ஆர்.கே.செல்வமணி. இதை அறிந்த நடிகர் சிவகுமார்,சூர்யா மற்றும் கார்த்திக் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்கள். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைள் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு முதல் பலி – மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் காலமானார்..!

உலகம் முழுவதும் 19 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை – திணறும் வல்லரசு நாடுகள்..!

இந்த நிலையில், சினிமா தொழிலாளர்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் ரூ.10 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இதை அறிந்த மற்ற சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here