‘இந்தியாவில் போலியோவை விரட்டியது போல கொரோனாவை விரட்டுவோம்’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!!

0
health minister in chennai

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்னையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். போலியோவை இந்தியாவிலிருந்து விரட்டியது போல கொரோனாவையும் விரட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட ஆய்வு

இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்திய அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவத்தின் முதல் கட்டமாக கொரோனா களப்பணியில் முன் நிற்கும் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்துவதில் இரண்டாம் கட்டமாக பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் நேற்று இந்தியாவின் அனைத்து மாநில சுகாதார துறையிடமும் காணொளி மூலம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை தொடர்ந்து தற்போது கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய சுகாதார துறை அமைச்சர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை பார்வையிட்டார். இது தொடர்பாக பேசிய அவர், ஜனவரி 17 முதல் போலியோ தடுப்பு மருந்து போடப்படும். மேலும் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.

கயல் ஆனந்திக்கு திடீர் திருமணம் – மாப்பிள்ளை இவர் தானா?? குவியும் வாழ்த்துக்கள்!!

இந்தியாவில் கொரோனா பரவும் சதவீதம் குறைந்துள்ளது. மேலும் 2300 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனையை கண்டறிய அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையை ஆய்வு செய்த பிறகு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் பெரியமேடு மருத்துவ கிடங்கையும் பார்வையிடவுள்ளார். செங்கல்பட்டு தடுப்பு மருந்து மையம் மற்றும் ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தையும் பார்வையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here