கொரோனா நிலவரம்: இந்தியாவில் 4.3 லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள்!!

0

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக  32,937 பேருக்கு கொரோனா தொற்று உறுதியகியுள்ளது. மேலும் இந்த பெருந்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 417 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதலே இந்தியா கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதில் கவலை அளிக்கும் என்னவென்றால் இந்த வைரஸ் தன்னை உருமாற்றி கொண்டு அடுத்தடுத்த அலையாக ஏற்படுகிறது. உருமாறிய டெல்டா வைரஸால் இரண்டாம் அலை ஏற்பட்டது.

இதன் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்து இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு அதிகரிப்பது மக்களிடம் அச்சத்தை உண்டாகியுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேர கொரோனா விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 32,937 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,22,25,513 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் நேற்று மட்டும் 417 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மேலும் 3,81,947 பேர், கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம்  97.48% ஆக உள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here