ஒரே நாளில் சட்டென்று குறைந்த கொரோனா.. மூன்றாம் அலையில் சிக்காமல் தப்பிக்குமா இந்தியா?

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 252 பேர் பலியாகியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி இந்த தொற்று பாதிப்பு 30,256 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிலவரம்: 

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா என்ற அச்சமும் பயமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மாநில அரசும் தொற்றின் பரவல் வேகத்தை குறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் பயனாக நேற்றைய நிலவரத்தை விட இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகியுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் இன்றைய தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 252 பேர் இறந்துள்ளனர். மேலும் 34,469 பேர் இந்நோயில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் தற்போது வரை இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்புகள்  4,45,385  ஆக உயர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here