கூல்ட்ரிங்க்ஸ் குடித்த 2 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி – ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு!

0
cool drinks
cool drinks

சென்னையில் ஒரு கடையில் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வாந்தி எடுத்த சிறுவர்கள்:

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இருக்கும் மளிகை கடையில் நேற்று இரண்டு சிறுவர்கள் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி  பருகி உள்ளனர்.  இந்த பானத்தை பருகிய சில மணித்துளிகளில் ரத்த வாந்தி எடுத்து இரண்டு சிறுவர்களுக்கும் மயங்கி சரிந்தனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அந்த சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த கூல்ட்ரிங்க்ஸ் காலாவதியான நிலையில்  இருந்திருக்கலாம்.  அதனால், சிறுவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here