மூன்றாம் அலையில் சிக்கிய இந்தியா?? – 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு புதிதாக தொற்று!!

0
இந்தியாவில் தொடங்கியது 4ம் அலை? மத்திய குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு! பீதியில் பொதுமக்கள்!!
இந்தியாவில் தொடங்கியது 4ம் அலை? மத்திய குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு! பீதியில் பொதுமக்கள்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 281 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

நாட்டில் இரண்டாம் அலை ஓய்ந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குறைந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து உள்ளது. அதுவும் ஒரு நாளில் புதிதாக 35,000 க்கும் மேல் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாவதே மிகவும் கவலை கூறிய விஷயமாக உள்ளது. அதே சமயம் தேசிய நோய் கட்டுப்பாட்டு இயக்குனர் ஆபத்தான கொரோனா வகை இந்தியாவில் இல்லை என்று மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் ஒவ்வொரு நாலும் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடும். அதன் படி, நேற்று ஒரே நாளில் புதிதாக 35,662 பேர் பாதித்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,34,17,390 ஆக உயர்ந்தது. மேலும் இறப்பு எண்ணிக்கை 281 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,44,529 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக கடந்த 24 மணி நேரத்தில் 33,798 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,26,32,222 ஆக உயர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here