இந்தியாவில் அதிகரிக்கும் BF.7 வகை கொரோனா., புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி.., பொதுமக்கள் பீதி!!

0
இந்தியாவில் அதிகரிக்கும் BF.7 வகை கொரோனா., புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி.., பொதுமக்கள் பீதி!!
இந்தியாவில் அதிகரிக்கும் BF.7 வகை கொரோனா., புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி.., பொதுமக்கள் பீதி!!

உலக அளவில் கோவிட்-19 கொரோனாவுக்கு பிறகு பெரிய அச்சுறுத்தலாக ஒமிக்ரான் BF.7 உருவெடுத்துள்ளது. இதனால் சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சீனாவில் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் உயிரிழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்தியாவில் குஜராத், ஆந்திரா மாநிலங்களில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா பதிவாகி தற்போது குணமடைந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதி தான் lucky.., வெளியான வரைவு பட்டியல்.., மறக்காம பாருங்க!!

இதைத்தொடர்ந்து அண்மையில் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 பேருக்கு ஒமிக்ரான் BF.7 உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 3 நபர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கொரோனா பரவல் 25% அதிகரிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here