இந்தியாவில் மூன்றாம் அலை உருவானதா? – ஒரே நாளில் 46,164 பேருக்கு கொரோனா!!

0
18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!
கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மத்திய அரசு.. இந்தியாவின் உயரும் பலி எண்ணிக்கை!

இந்தியாவில் ஒரே நாளில் 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 607 பேர் இந்தத்தொற்றுக்கு உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டாம் அலையால் ஏற்பட்ட தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் 25 ஆயிரத்தை ஒட்டி பதிவாகிய தொற்று பாதிப்பு தற்போது 46 ஆயிரத்தை கடந்துள்ளது. இது மூன்றாம் அலை ஆரம்பித்து விட்டதா? என்ற பயத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...

மேலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நேற்று மட்டும் ஒரே நாளில் கேரளாவில் 31 ஆயிரத்தை தாண்டி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நாளில் 34,159 பேர் தொற்றிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 607 பேர் பலியாகி உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here