நெற்றிக்கண் நயன்தாராவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை… மாஸ் வீடியோவால் மெர்சலான ரசிகர்கள்!!!

0

தமிழில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு  புகழ் பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நயன்தாரா அவர்களின் நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை தன் பாணியில் பேசி உள்ளார்.

நடிகை காவ்யா தான் கல்லூரியில்  படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் நிகழ்ச்சி மற்றும் ஷார்ட் பிலிம் போன்றவற்றில் ஆர்வம் உடையவராக இருந்தார். மேலும் இவர் 10க்கும் அதிகமான ஷார்ட் பிலிம்களில் நடித்து உள்ளார். அவரின் சில ஷார்ட் பிலிம்கள் மில்லியன் வியூஸை கடந்து உள்ளது. மேலும்  இந்த ஷார்ட் பிலிம்கள் மூலமாக தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் அவரின் முதல் சின்னத்திரை கதாபாத்திரம் பாரதி கண்ணம்மா சீரியலின் அறிவுமணி கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரம் ஒரு சைடு கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். இந்நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பேமஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா துரதிஷ்டவசமாக இறந்ததற்கு பின்னர் அந்த வாய்ப்பு அவரின் கதவை தட்டியது.

வெள்ளை நிற உடையில் விட்டத்தை பார்த்தபடி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா…!வாயை பிளந்த ரசிகர்கள்!!!

அதன் பின்னர் அம்மணி காட்டுல மழை தான். அதாவது இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் மூலம் பல  ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.  மேலும் அவர்கள் தன்னை விட்டு விலகாமல் இருக்க இணையத்தில்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை  வழக்கமாக வைத்து உள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி கண்டு வரும் நெற்றிக்கண்  என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார். தற்போது அவரின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here