கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு -1,952 ரயில்வே ஊழியர்கள் மரணம்!!

0

கொரோனா நோய்த்தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில்வேயில் தினசரி 1000 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதுவரை 1,952 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரை கொள்ளும் கொரோனா :

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பரவல் இன்று வரை உயர்ந்து கொண்டு தான் உள்ளது. நாடு முழுக்க பல லட்சம் மக்கள் கொரோனாவால் பலி ஆகி உள்ளனர். முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி மக்களை பாதிக்கும் கொரோனா தொற்றானது அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது.

தற்போது வந்த அறிவிப்பின்படி ரயில்வே துறையில் இதுவரை 1,952 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. உலகிலேயே அதிகமான ஊழியர்களை கொண்டது ரயில்வே நிறுவனம். சுமார் கிட்டத்தட்ட 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ரயில்வே துறை இந்தியாவில் பெரும்பங்கை ஆற்றி வருகிறது. பரவிவரும் கொரோனா தோற்று நாள் ஒன்றுக்கு 1000 ஊழியர்களை பாதிப்பதாக அறிவித்துள்ளனர். இதுவரை 1,952 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் ரயில்வே ஊழியர்களின் உயிரிழப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரயில்வே சங்கங்கள் கோரிக்கைகள் வைத்துள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும், ரயில்வே மருத்துவமனைகளை படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here