இந்தியாவில் ஒரே நாளில் 24,337 பேருக்கு கொரோனா தொற்று – 333 பேர் உயிரிழப்பு!!

0

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 24,337 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,55,560 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 333 பேர் உயிரிழந்து உள்ளதால் பலி எண்ணிக்கை 1,45,810 ஆக உயர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாடு முழுவதும் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி!!

ஒரே நாளில் 25,709 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 96,06,111 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here