10 நிமிடங்களில் பான் கார்டு பெற வேண்டுமா?? வருமான வரித்துறையின் புதிய வழிமுறைகள்!!

0
pan card
pan card

பயனாளர்கள் தங்களது ஆதார் கார்டு மூலம் வெறும் 10 நிமிடங்களில் e -pan எடுப்பதற்கான புதிய வழிமுறைகளை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளது. மேலும் இதன் மூலம் செலவில்லாமல் பான் கார்டினை பெற முடியும்.

பான் கார்டு:

தற்போது உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு மிகவும் முக்கியான ஒன்று. இது இரண்டும் இல்லாமல் பணப்பரிவர்த்தனை கூட செய்ய இயலாது. பான் கார்டில் மொத்தம் 10 இலக்க எண்கள் இருக்கும். இது வருமான வரித்துறை வெளியிடுகிறது. NSDL மற்றும் UTITSL மூலமாகவும் பான் கார்டு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த வசதிக்காக கட்டணம் வசூலிக்கின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் நீங்கள் வருமான வரித்துறை போர்ட்டல் மூலம் பான் கார்டைப் அப்ளை செய்வதற்கு பயன்படுத்தினால், நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. தற்போது இதனை எளிமையாக்கும் வகையில் மற்றும் இலவசமாக பெற்றுக் கொள்வதற்கு வருமான வரித்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயனாளர்கள் தங்கள் ஆதார் கார்டை வைத்து கொண்டே சில நிமிடங்களில் e -pan பெற்றுக் கொள்ளலாம். இதனை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த வசதியின் மூலம் சுமார் 7 லட்சம் பேர் பான் கார்டை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பித்தக்கது. இவ்வழி மூலம் விண்ணப்பம் செய்யும் பயனாளர்களுக்கு pdf படிவத்தின் மூலம் பான் கார்டு கிடைக்கும்.

இந்தியாவில் ஒரே நாளில் 24,337 பேருக்கு கொரோனா தொற்று!!

அதில் QR code இடம் பெற்றிருக்கும் மேலும் அதில் உங்கள் பெயர், புகைப்படம் , மற்றும் பிறந்த தேதி போன்றவை இடம் பெற்றிருக்கும். அதன் பின் உங்கள் e -pan னை பதிவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்ப செயல்முறை முடிந்ததும், நீங்கள் 15 இலக்க பதிவு எண் (Acknowledgment number) பெறுவீர்கள். உங்கள் பான் கார்டின் நகல் உங்கள் mail ID-க்கு அனுப்பப்படும்.

எளிய வழிமுறைகள்:

  • முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home என்னும் தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் இருக்கும் PAN through Aadhaar என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதன் பின் ஓர் புதிய பக்கம் உருவாகும் அதில் Get New Pan என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதன் பின் பயனாளர்கள் தங்கள் ஆதார் கார்டில் உள்ள எண்களை அதில் பதிவு செய்ய வேண்டும். பதிவிட்ட பின் ‘I CONFIRM’ என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பயனாளர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியில் OTP வரும். அதை அந்த தளத்தில் வைத்து சரிபார்க்கவும். பின்னர் pdf வடிவில் பான் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here