அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலை …!18.33 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை !!!

0

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா எனும் கொடிய வைரஸ். இந்நிலையில் தற்போது அதன் இரண்டாம் அலை மிகுந்த பாதிப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 18.33 கடந்து உள்ளது.

கொரோனா என்னும் கொல்லுயிரி உலகம் எங்கும் பரவி நாட்டையே உலுக்கி வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் முதல் அலை பாதிப்பை காட்டிலும் இரண்டாம் அலை படு பயங்கரமாக இருக்கிறது.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் முதல் 5 இடங்களில் அமெரிக்கா, இந்தியா , பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன. பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு மக்களை பாதுகாக்க போராடி வருகிறது. இருப்பினும் 2019ம் ஆண்டு தனது கோர முகத்தை காட்ட தொடங்கிய கொரோனா இன்னும் அதன் அக்ரோசம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,33,88,992-ஆக உள்ளது. மேலும் இதன் கோரப்பிடியில் இருந்து 16,79,03,310 பேர் மீண்டுள்ளனர். மேலும் இந்த தொற்று பாதிப்புக்குள்ளான 1.15 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில்  78,738 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் பிடியில் சிக்கி 39,70,595 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here