உடனடியாக அமெரிக்கா செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் பாரதி – கடைசி நேரத்தில் கண்ணம்மாவை பார்க்க ஆசைப்படும் ஹேமா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி தன் மனதை கல்லாக்கி கொண்டு முக்கியமான முடிவை எடுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் ஷாக்கில் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா எப்படியோ உயிர் பிழைத்து வீட்டிற்கு வர அவரின் நிலையை நினைத்து கண்கலங்குகிறார். அதன் பிறகு கண்முழிக்கும் ஹேமா சமையல் அம்மா என்று புலம்புகிறார். இதனை பாரதியால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

சௌந்தர்யா அப்பொழுது வர இதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார். இதனால் கோவமடையும் பாரதி வேகவேகமாக துணி மணிகளை எடுத்து வைக்கிறார். இதனால் ஹேமா பதறி அடித்து எழுகிறார். எல்லாரும் பாரதி அமெரிக்கா செல்ல தான் இப்படி செய்கிறார் என்று நினைத்திருந்தனர்.

ஆனால் பாரதி எடுத்த முடிவு அது அல்ல ஹேமாவை கண்ணம்மா வீட்டில் விடுவதற்காக தான் எல்லா துணிகளையும் எடுத்து வைத்துள்ளார். இதனை எல்லாரிடமும் சொல்ல அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர். மேலும் ஹேமாவும் செல்ல தயாராக பாரதியால் அதனை தாங்க முடியவில்லை.

ஹேமாவிற்கும் அப்பாவை விட்டு பிரிய மனமும் இல்லை. கடைசி நேரத்தில் சௌந்தர்யா கையை உதறி விட்டு விட்டு பாரதியை தேடி ஓடி வருகிறார். பாரதிக்கு அப்பொழுது தான் உயிரே வருகிறது. இப்போ ஒரு வார்த்தை சொல்லு இப்போவே நம்ம அமெரிக்கா செல்லலாம் என்று சொல்கிறார்.

ஹேமாவும் கடைசியில் தன் அப்பா தான் முக்கியம் என்று ஒத்துக்கொள்கிறார். ஆனால் கடைசியாக சமையல் அம்மாவை மற்றும் பார்த்து விட்டு வரலாம் என்று சொல்ல பாரதி சற்று யோசிக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here