என்ன மனுஷன்யா நீ.., மலை கிராம மக்களுக்கு KPY பாலா செஞ்ச காரியம்.., வைரலாகும் புகைப்படம்!!!

0
என்ன மனுஷன்யா நீ.., மலை கிராம மக்களுக்கு KPY பாலா செஞ்ச காரியம்.., வைரலாகும் புகைப்படம்!!!
என்ன மனுஷன்யா நீ.., மலை கிராம மக்களுக்கு KPY பாலா செஞ்ச காரியம்.., வைரலாகும் புகைப்படம்!!!

விஜய் டிவியில் வித்தியாசமான நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் பாலா. இவர் என்னதான் பல நிகழ்ச்சிகளில் நடித்தாலும் குக் வித் கோமாளி ஷோ தான் இவரை ஓவர் நைட்டில் பிரபலமாகியது. இப்போது வெள்ளி திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் பாலா ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி பகுதிகளில் உள்ள 18 மலை கிராம மக்களின் மருத்துவ பணிக்காக தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் இந்த மாவட்டத்துக்கு 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!!

அதாவது இந்த மலைப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பாம்பு கடி போன்ற அவசர சிகிச்சைகளுக்கு மருத்துவ வசதி இல்லாமல் பலரும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் இவர்கள் சிகிச்சை பெற வேண்டுமென்றால் கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் இந்த மக்களின் நலன் கருதி நகைச்சுவை நடிகர் பாலா ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here