அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!!

0
college students
தமிழக மாணவர்களின் இந்த நிலைமைக்கு எப்போ தான் முடிவு? பொது மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் அக்டோபர் 15 முதல் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.  மேலும் புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கான அனுமதியையும் அவர் வழங்கி உள்ளார்.

கல்லூரிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். இந்த நேரத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது தவிர, உணவகங்கள் முதல் கோயில்கள் வரை சில விதிகளுடன் திறக்கப்பட்டு உள்ளன. இப்போது ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி பல்வேறு பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கானஅனுமதியை வழங்கியுள்ளார். மேலும் அக்டோபர் 15 முதல் மாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார்.

அவர் மாநிலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த உயர்கல்வி கொள்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் முதல்வர் ஜெகன் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். கூட்டத்தில், உயர்கல்வியில் 80 சதவீதம் வரை மொத்தமாக மாணவர்களை சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தவிர, மூன்று மற்றும் நான்கு ஆண்டு பட்டப்படிப்புகளில் 10 மாத பயிற்சி வசதி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். அதே நேரத்தில், ஒரு வருடம் கழித்து, வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகளின் திறன் மேம்பாடு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இன்ஜினியரிங் கட்ஆப் மதிப்பெண்கள் விபரம் வெளியீடு – எவ்வாறு தெரிந்து கொள்வது??

அதே கூட்டத்தில், அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் கூறினார். அதே நேரத்தில், செட் தேர்வுகளும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும். விஜயநகரம் மற்றும் பிரகாசம் மாவட்டத்தில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படுவது குறித்து மேலும் தெரிவித்த முதல்வர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கல்லூரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here