சதுரங்க வேட்டை பட ஹீரோ வீட்டில் ஏற்பட்ட மரணம்.. இது தான் இறப்பிற்கு காரணம் – அதிரவைக்கும் பதிவு!

0
சதுரங்க வேட்டை பட ஹீரோ வீட்டில் ஏற்பட்ட மரணம்.. இது தான் இறப்பிற்கு காரணம் - அதிரவைக்கும் பதிவு!

நடிகர் நட்டி நடராஜன், தன் மாமாவின் இறப்பு பற்றியும் அதன் காரணத்தையும் சமூகவலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நட்டி நடராஜன்:

சினிமா துறையில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பிரபலமானவர் தான் நட்டி என்கிற நடராஜன். தற்போது நடிகராக அவதாரம் எடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். அதன் வரிசையில் சதுரங்க வேட்டை, முத்துக்கு முத்தாக , கர்ணன் போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. தளபதி விஜய் நடித்த யூத், புலி, தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா போன்ற படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் நட்டி வீட்டில் டைல்ஸ் போடுவதை எதிர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, சிலர் கவுரவமாக வாழ்கின்ற பெயரில் தங்களது வீட்டின் தளத்தை டைல்ஸ் தளமாக பதித்து வருகின்றனர். அதில் இருக்கும் ஆபத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. இந்த டைல்ஸ்னால் தான் எனது தாய் மாமனை சமீபத்தில் இழந்தேன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் குளித்து வெளியில் வரும் போது வழுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இறந்தார். சில குடும்பங்களுக்கு டைல்ஸ் எதிரியாக அமைந்து வருகிறது. முதியோர் இருக்கும் இல்லத்தில் டைல்ஸ் பயன்படுத்தாதீர்கள் என்று நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here