பெண்களுக்கு இலவச ஆட்டோ வழங்கும் திட்டம் அறிவிப்பு – மாநில அரசு கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்!!

0
பெண்களுக்கு இலவச ஆட்டோ வழங்கும் திட்டம் அறிவிப்பு - மாநில அரசு கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்!!

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மகளிருக்கு ஆட்டோ இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, இலவச ஆட்டோ வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் மகளிருக்கு, நகரப் பேருந்துகளில் இலவச பயணம் அளிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி அரசு பெண்களுக்கான முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த மகளிருக்கு ஆட்டோ இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, இலவசமாக ஆட்டோ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இது மட்டும் இல்லாமல் புதுச்சேரியில்  இயங்கும் அனைத்து பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளாதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்புகளை மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ளார். மகளிர் மேம்பாட்டுக்காக, புதுவை அரசு மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்கு பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here