ஓஹோ இது தான் காரணமா.. நிர்வாண போட்டோஷூட் தொடர்பாக விளக்கமளித்த நடிகர் ரன்வீர் சிங்!

0
ஓஹோ இது தான் காரணமா.. நிர்வாண போட்டோஷூட் தொடர்பாக விளக்கமளித்த நடிகர் ரன்வீர் சிங்!

நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் நிர்வாண போட்டோஷூட் நடத்தி அதை வலைத்தளங்களில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் அது பற்றி காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரன்வீர் சிங்:

பாலிவுட் வட்டாரங்களில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் நடிகர் ரன்வீர் சிங். தனது முதல் படத்திலேயே மக்களிடம் வரவேற்பை பெற்று தனக்கென ரசிகர் கூட்டத்தை தன் வசம் இழுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி அவருக்கு அதிக அளவில் பெண் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை திருமணம் முடித்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் நிர்வாண போட்டோஷூட் நடத்தி அதை வலைத்தளங்களில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.  இந்த சம்பவத்தால் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் ரன்வீர் சிங் அதை பொருட்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் நேற்று செம்பூர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரிடம் தீவிர விசாரணையை காவல்துறை மேற்கொண்டனர். ரன்வீர் சிங்கிடம், அவர் நிர்வாணமாக போட்டோஷுட் நடத்தியதன் நோக்கம் என்ன என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு நடிகர் ரன்வீர் சிங் இப்படி ஒரு விளைவை அந்த போட்டோஷூட் எனக்கு ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here