சென்னை to நெல்லை கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

0
சென்னை to நெல்லை கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து கோடை விடுமுறை வழங்க இருப்பதால் பலரும் சுற்றுலா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இப்போதே தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை to நெல்லை கோடை கால சிறப்பு ரயில் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 என வாரந்தோறும் வியாழக்கிழமை நெல்லை to சென்னைக்கும், ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 என வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சென்னை to நெல்லைக்கும் கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here