ரேஷன் கடைகள் முன்பு கட்சி பேனர்கள் வைக்க தடை – நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!

0

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூ.2500 மற்றும் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கி வருகின்றனர். தற்போது ரேஷன் கடைகளுக்கு முன்பு அரசியல் கட்சிகள் பேனர் வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.

பொங்கல் பரிசு:

வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடபடுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரும்பு துண்டுகள் ரேஷன் கடைகளில் வழங்கி வருகின்றனர். மேலும் இதற்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை அதிமுக தொண்டர்கள் வழங்கி வருகிறார்கள் என்ற குற்றம் எழுந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து உயர் நீதி மன்றத்தில் புகார் அளித்த திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது டோக்கன்களை அதிமுகவினர் வழங்கி வருவதாகவும் மேலும் பொங்கல் பரிசு வழங்கும் பையில் அதிமுக உறுப்பினர்கள் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு தீர்ப்பளித்த உயர் நீதி மன்ற நீதிபதிகள் டோக்கன்களில் எந்த ஒரு கட்சி தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது.

பேனருக்கு தடை:

மற்றொரு மனுவில் சுய விளம்பரம் தேடிக் கொள்ள அதிமுகவினர் ரேஷன் கடைகள் முன்பு அதிமுக கட்சி உறுப்பினர்கள் பேனர்களை வைத்திருப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி – மாநில அரசு அதிரடி திட்டம்!!

ரே‌ஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கம்-பொங்கல்பரிசு நாளை முதல் விநியோகம் || Pongal Gift distribution from tomorrow in Ration shops

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரேஷன் கடை முன்பு அரசியல் கட்சிகளை பேனர்கள் வைக்க கூடாது என்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக நீக்க உத்தரவிட்டும் உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் எந்த நோட்டீசும் கொடுக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் முதல்வர் மற்றும் மறைந்த முதல்வரின் புகைப்படம் மட்டுமே இடம் பெறவேண்டும் என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here