சென்னை வாசிகளே கவனம்., இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் ரத்து! வெளியான எச்சரிக்கை!!

0
சென்னை வாசிகளே கவனம்., இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் ரத்து! வெளியான எச்சரிக்கை!!

புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளதாக குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

வெளியான அறிவிப்பு:

தலைநகர் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில், லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற மார்ச் 2ம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை காலை 6:00 மணி வரை குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், பகுதி 4 க்கு உட்பட்ட முத்தமிழ் நகர், கவியரசு கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், பகுதி 6 உட்பட்ட கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்? அறிக்கை தாக்கல் செய்ய துறை செயலாளர்களுக்கு உத்தரவு!!

எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவைப்படும் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தேவை இருந்தால் லாரி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் குடிநீர் விநியோகம் சீராகும் என மாநகர குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here