கூடிய விரைவில் தமிழகத்தில் தனியார் ரயில் சேவை…11 வழித்தடங்களில் அறிமுகம்!!!

0

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.சென்னையை மையமாக வைத்து 11 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மேலும் சென்னையில் இருந்து மதுரை, மும்பை, மங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு  விரைவில் சேவையை ஆரம்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்றின் காரணமாக ரயில் சேவை என்பது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பரவல் குறைந்த இருந்த நிலையிலும் சிறப்பு ரயில்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரயில் சேவை இன்று வரை தனது பழைய நிலையை அடைய வில்லை.மேலும் சில ரயில் வழித்தடங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில் அதனை இப்போது செயல்படுத்த உள்ளது.அதற்கான மதிப்பு சுமார் 3,221 கோடி  என ரயில்வே துறை  தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்தை தனியாருக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என்று ரயில்வேத்துறை தலைவர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார். இந்த சேவையை வழங்க 10 பெரும் நிறுவனங்கள் விண்ணப்பதை அளித்து உள்ளது.

சென்னையில் இருந்து மதுரை, கோவை,  திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை, மங்களூரு, செகந்திராபாத் மற்றும் டெல்லி வழித்தடங்களில் தனியார் ரயில் சேவைக்காக அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களாகும். தெற்கு மாவட்டங்களுக்கு தாம்பரம் ரயில் நிலையம் முனையமாக செயல்படும் என்றும்,தண்டையார்பேட்டை ரயில் நிலையம், தனியார் ரயில்களின் பராமரிப்பு பணிமனையாக மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here