நூலிலையில் 100 வது படத்தை மிஸ் செய்த காதல் தோல்வி நடிகர் – யாருனு நீங்களே பாருங்க!!

0

தமிழ் சினிமாவில் 100  திரைப்படங்கள் வரை நடிப்பது என்பது ஒரு சாதனை. இதுவரை வெகு சிலரே 100 திரைப்படங்கள் வரை தமிழில் நடித்து வந்த நிலையில் 100 வது திரைப்படத்தில் நடிக்கும்போது உயிர் இழந்தவர் நடிகர் முரளி.

100 வது திரைப்படம்

திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், என மொழிகள் இருந்தாலும் தமிழ் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர்களின் 25 வது ,50 வது திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இது வரை 100 திரைப்படங்கள் நடித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதுவரை எம்ஜிஆர், சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராமராஜன், கமலஹாசன் என்று ஒரு சிலர் மட்டுமே 100 திரைப்படங்கள் நடித்துள்ளனர்.

இந்த வரிசையில் வராமல் தப்பிப்போனவர் தான் நடிகர் முரளி. இவரை இதயம் முரளி என கூறினாலே அனைவரும் அறிவார். பூவிலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சின்ன பசங்க நாங்க, மணிகுயில், மஞ்சுவிரட்டு, அதர்மம், என் ஆசை மச்சான், பூமணி போன்ற படங்கள் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இவருக்கு அடையாளமாக ஆன படம் இதயம் தான். உருகி உருகி காதல் செய்து இளைஞர்களை தன்வசப்படுத்தினார். பல திரைப்படங்கள் நடித்த அவர் 99வது திரைப்படமாக மகனின் முதல் படமான ‘பாணா காத்தாடி’-யில் கெஸ்ட் ரோலில் நடித்தார். தனது 100 வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மரணம் அடைந்து 100 திரைப்படங்களை நடித்த நடிகர்கள் பட்டியலில் இடம்பெறாமல் சென்றுவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here