புதிய ஓய்வூதிய விதிமுறை: இனி நேரடியாக இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்? மத்திய அரசு அதிரடி!!!

0

அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் ஓய்வூதிய விதிகளில் புதிய மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி முன்னதாக அரசு ஊழியரோ அல்லது ஓய்வூதியம் பெறுபவரோ உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களது ஓய்வூதியம் மனைவி அல்லது கணவருக்கு வழங்கப்படும்.

தற்போது புதிய விதிகளின் படி உயிரிழக்கும் அரசு ஊழியர் மீது விவாகரத்து அல்லது குடும்ப வன்முறை வழக்கு நடைமுறையில் இருந்தாலோ, கணவர் அல்லது மனைவி இல்லாமல் இருந்தாலோ, அவர்களுடைய குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த புதிய விதியால் கணவர் இல்லாமல் தனியாக வாழும் பெண் ஊழியர்கள் பலரும் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here