பாலியல் தொல்லையால் கர்ப்பமான சிறுமிகளுக்கு புதிய சட்டம்.., ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு!!

0
பாலியல் தொல்லையால் கர்ப்பமான சிறுமிகளுக்கு புதிய சட்டம்.., ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு!!
பாலியல் தொல்லையால் கர்ப்பமான சிறுமிகளுக்கு புதிய சட்டம்.., ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது நாட்டில் தற்போது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பெற்றோர்கள் எவ்வளவு கவனமுடன் பிள்ளைகளை வளர்த்தாலும் ஏதோ ஒரு சூழலில் இது போன்ற தவறுகள் நிகழ்ந்து விடுகிறது. இப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதால் சில பெண்கள் கர்ப்பமாகி விடுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரவணைக்காமல் அனாதரவாக கைவிட்டு விடுகின்றனர். இதனால் பல குழந்தைகள் நிற்கதியாக நடுரோட்டில் நிற்கின்றனர்.

தமிழகத்தில் இனி சிறைக் கைதிகளுக்கும் கூட டிஜிட்டல் சேவை? வெளியான முக்கிய தகவல்!!!

இது போன்று உள்ள பெண் பிள்ளைகளை ஆதரித்து உணவு, தங்குமிடம் மற்றும் பல நிதிகளை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால் நிர்பயா நிதியின் கீழ் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இது தொடர்பாக மாநில மற்றும் குழந்தை நல அமைப்புகளுக்கு பரிந்துரைக்க அனுப்பியுள்ளோம். இதை மாநில அரசு உறுதிப்படுத்திய உடன் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here