21 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா தாக்கல்!!

0
Youngsters Using Smartphones

அமெரிக்காவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவும் மற்றும் சொந்தமாக மொபைல் வைத்திருக்கவும் தடை விதிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்தும் அளவுக்கு முதிர்ச்சி இருக்காது எனவும் செல்போனை பயன்படுத்துவதால் அவர்கள் பல ஆபத்துகளை சந்திக்கக்கூடும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்தத் தடையை மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 72 ஆயிரம் ரூபாய்) அபராதமும் விதிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.
எனக்கே இந்த மசோதா நிறைவேறும் எனத் தோன்றவில்லை. ஆனால் இது விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்பதற்காகவே மசோதாவைத் தாக்கல் செய்தேன் என ஜான் ரோட்ஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here