“மத்திய அரசின் இந்த தேர்வும் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறும்”., வெளியான மாஸ் அறிவிப்பு!!!

0
மத்திய அரசுத் துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்படுவதால் பல்வேறு மாநிலத்தவர்களும் பயன் பெற முடியாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி அண்மைக்காலமாக SSC உள்ளிட்ட மத்திய அரசு துறைக்கான தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு வரும் பிப்.20 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 48 லட்சம் பேர் எழுத உள்ளதால், தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது தேர்வர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here