தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” ?? வெளியான நியூ அப்டேட்!!

0

மக்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 12) ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரில், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்  கூட்டத்தொடர் தொடங்கும் இந்நாளில் (பிப்ரவரி 12) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடந்த இருந்தனர். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

“மத்திய அரசின் இந்த தேர்வும் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறும்”., வெளியான மாஸ் அறிவிப்பு!!!

இதனை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் போராட்டம் நடத்திய நிலையில், அடுத்த மூன்று மாதத்திற்குள் இதற்கு தக்க முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 மாதங்கள் ஆகியும் இது குறித்து எவ்வித முடிவும் அறிவிக்கப்படாததால் இன்று டிபிஐ வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்த இவ்வியக்கம் முடிவு செய்து இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் போராட்டம் பிப்ரவரி 19 ஆம் தேதி (பட்ஜெட் தாக்கல் நடைபெறும் நாள்) நடைபெறும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here