Tuesday, May 21, 2024

இறுதியாண்டு தேர்வுகள் தவிர்த்து மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து – முதல்வர் உத்தரவு!!

Must Read

ஏற்கனவே கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு இந்த பருவத்திற்கான தேர்வுகளை ரத்து செய்திருந்த தமிழக அரசு தற்போது, இறுதி தேர்வினை தவிர்த்து மற்ற அனைத்து பருவத்தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், பல்வேறு தேர்வுகளையும் ரத்து செய்தது, தமிழக அரசு. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வினை ரத்து செய்து ஆல்-பாஸ் என்று அறிவித்திருந்தது. இதனால் கல்லூரி மாணவர்களும் தங்களது தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

college students
college students

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, முறையாக உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து பரிசீலனை செய்தது. அவர்கள் பரிந்துரைத்ததன் பெயரில், கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற அனைவர்க்கும் தேர்வுகளை ரத்து செய்தது. தற்போது கல்லூரி தேர்வுகள் ரத்து குறித்து தமிழக முதலமைச்சர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட அறிக்கை:

முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது “கொரோனா நோய் பரவல் காரணமாகவும், யூஜிசி வழிகாட்டுதல்களின் பெயரிலும் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து பருவத்தேர்வுகளும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன்.இதற்கான அரசாணை கூடிய விரைவில் வெளியிடப்படும் ” என்று தெரிவித்துள்ளார்.

யார் யாருக்கு தேர்வுகள் ரத்து??

அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து குறித்த விவரங்கள் கூறப்பட்டுள்ளது. அதில்,

  • கலை மற்றும் அறிவியல் படிக்கும் முதலாம், இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்கள், முதுகலை அறிவியல் மற்றும் கலை படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் ,

கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – முன்னணியில் டெல்லி!!

  • பின், இளங்கலை பொறியியல் படிக்கும் முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதுகலை பொறியியல் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள்,
  • பின், எம்.சி.எ படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ,

மேலே குறிப்பிட்டுள்ள மாணவர்கள் அனைவர்க்கும் இறுதி ஆண்டு தேர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். கல்லூரிகளில் பணம் கட்டிய மாணவர்களுக்கு பருவத்தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கனமழை எதிரொலி: தமிழகத்தில் 11 பேர் உயிரிழப்பு., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பலத்த இடியுடன் கூடிய பரவலாக கனமழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -