வாவ்.. வேற லெவல்.. உலக சாதனை படைத்த BTS பாய்ஸ் – ட்ரெண்ட் செய்யும் இந்திய K-Pop ரசிகர்கள்!

0
வாவ்.. வேற லெவல்.. உலக சாதனை படைத்த BTS பாய்ஸ் - ட்ரெண்ட் செய்யும் இந்திய K-Pop ரசிகர்கள்!

உலகை கலக்கி வரும் இசைக்குழுக்களில் டாப் இடத்தில் இருப்பவர்கள் BTS. தென்கொரியவை மையமாக கொண்டு 2013 ஆம் ஆண்டு 7 பேரால் இந்த குழு தொடங்கப்பட்டது. கொரிய நாட்டை சார்ந்த பாப் குழு என்பதால் கே பாப் என்றழைக்கப்படுகிறது. பாடல், நடனம், பாடல் வரிகள் எழுதுவது என பன்முக திறமையை கொண்டு இந்த குழுவின் உறுப்பினர்கள் இருந்ததால் சில ஆண்டுகளிலேயே Bill board, AMA, MAMA என பல முக்கிய விருதுகளை வென்று குவித்ததனர்.

சமீபத்தில் தங்கள் சில காலம் தனி தனியாக தங்கள் வளர்ச்சி மீது கவனம் செலுத்தி பிரிவதாக அறிவித்தனர். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணைவோம் என்றும் கூறி இருந்தனர். இது இவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உண்டு செய்தது. இந்நிலையில் இந்த குழுவினர் சென்ற ஆண்டு தங்கள் இன்ஸ்டாவில் தங்களுக்கென அக்கௌன்ட் ஒன்றை ஓபன் செய்தனர்.

இவர்கள் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய நாளில் இருந்தே பல பேரின் சாதனைகளை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் BTS V புது உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது உலகிலேயே 50 மில்லியன் Followers-ஐ கடந்த முதல் கொரிய நாட்டை சேர்ந்த நபர் என்ற பெருமையை V பெற்றுள்ளார். ஏற்கனவே இவர் வெறும் 43 நிமிடங்களில் 1 மில்லியன் Followers-களை பெற்று கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here