
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு பொது மருத்துவமனைகளும் பல வசதிகளுடன் இயங்கி வருகிறது. அந்த வகையில் செங்கோட்டை அரசு மருத்துவமனையும் பல வசதிகளுடன் மக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவையை செய்து வருகிறது. ஆனால் இந்த மருத்துவமனையிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது அந்த மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க பயன்படும் குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது. எனவே இந்த அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி வேண்டும் என்று தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி தென்காசி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதாவிடம், தொழிலதிபர் காந்தி செல்வின் என்பவர் தலா ரூ. 1 லட்சம் மதிப்புடைய குளிர்சாதன பெட்டியை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார். மேலும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த குளிர்சாதன வைப்பறை விரைவில் அமைக்கப்படும் என்று சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா தெரிவித்தார்.